பாலக்கோடு, ஜூன் 29:
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் கிராமீன் கூட்டா இந்தியா பௌண்டேஷன் நிறுவனமும் காவல்துறையும் இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாமை தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு சி.ஏ.ஜி.எல். நிறுவன கிளை மேலாளர் ரஞ்சித்குமார் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கிராமீன் கூட்டா இந்தியா பௌண்டேஷன் நிறுவனத்தின் மண்டல மேலாளர் பசவராஜ், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேறினால் மட்டுமே முழுமையான வளர்ச்சியை அடைய முடியும் என்றும், பாலியல் சீண்டல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக அச்சமின்றி காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மூலம் பெண்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அருண், குழந்தை திருமணங்களை தடுப்பதன் அவசியம், இணையவழி மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர் மகேந்திரன், திடீர் தீ விபத்து, மின்சார விபத்துகள் மற்றும் ஆறுகள், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து செய்முறை விளக்கங்களுடன் பயிற்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயா, பகுதி மேலாளர்கள் குமரவேல், சிலம்பரசன் ராஜா, கிராமீன் கூட்டா இந்தியா பௌண்டேஷன் நிறுவன ஊழியர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் கிளை மேலாளர் வெற்றிவேல் நன்றி தெரிவித்தார்.
.gif)

.jpg)