தருமபுரி, ஜூலை 5:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட ஏ. ஜெட்டிஅள்ளி ஊராட்சியின் எர்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர். இணைப்பு நிகழ்ச்சி, தமிழக வெற்றிக் கழகத்தின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எம். சிவன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏ. ஜெட்டிஅள்ளி ஊராட்சி செயலாளர் தினேஷ் சபரிபிரசாத் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில், மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி வந்தவர்களை எம். சிவன் வரவேற்று, கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை உறுதி செய்து கொண்டார். அப்போது, கட்சியின் கொள்கைகள் மற்றும் மக்கள் நலப் பணிகள் குறித்து விளக்கமளித்தார். இந்த நிகழ்வில் தருமபுரி மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் வீரமணி, மாவட்ட வாக்குச்சாவடி அணி இணை அமைப்பாளர் தங்கராஜ், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி தினேஷ் ராஜா, நல்லம்பள்ளி வடக்கு ஒன்றிய செயலாளர் சென்னப்பன், ஒன்றிய நிர்வாகிகள் லோகேஷ், நவீன், அன்பரசன், திருமால், பெருமாள், ராஜேஷ் குமார், ஹரிஹரன், கார்த்திகேயன், கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

