Type Here to Get Search Results !

புஸ்சி ஆனந்த் பிறந்தநாள்: அரூரில் ஆதரவற்றோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாடிய தவெகவினர்.


அரூர், ஜூலை 18:


தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு, அரூர் மத்திய கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்தில் நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சென்னப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடியதுடன், அங்கிருந்த குழந்தைகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.


இதற்கு முன்னதாக, புஸ்சி ஆனந்த் அனைத்து வளங்களும் பெற்று மக்கள் பணியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சக்பால், ஒன்றிய இணைச் செயலாளர் செந்தில், பூவரசன், தமிழ்மலை, சியாம்சுந்தர், எம். சிங்காரம், ஜெயவர்த்தனன், மூவேந்தன், சித்திரைசெல்வன், கார்த்திக், அருண்பாண்டியன், சிங்காரவேலன், தனபால் மற்றும் மகளிரணி பொறுப்பாளர்களான மாதவி, புவனேஸ்வரி, மச்சக்காந்தி, தமயந்தரி, வெண்ணிலா, சோனியா, ரேவதி, சக்தி, ராதிகா, கோமதி, திரிஷா, தீபா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies