Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; அரசாணை 123-ஐ ரத்து செய்ய வலியுறுத்தல்.


பாலக்கோடு, ஜூலை  31:


தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஒன்றியத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் பொருளாளர் சுப்ரமணி, துணைத் தலைவர் முருகன் மற்றும் மூத்த நிர்வாகிகள் ராமசாமி, காவேரியப்பன், ரகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ஓய்வூதியர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


போராட்டத்தில், அரசாணை எண் 123-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதியர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் ரூ.644 தொகையை ரத்து செய்ய வேண்டும், 10 சதவீத ஓய்வூதிய உயர்வை வழங்க வேண்டும், ஓய்வூதியர்களின் மருத்துவச் செலவுகளை தமிழக அரசே முழுமையாக ஏற்க வேண்டும், முதியோர் ஓய்வூதியர்களை தங்களது உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


மேலும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஓய்வூதியர் நலக் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் முருகேசன், அன்பழகன், சாந்தா, சின்னபாப்பா, ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், ஏராளமான ஓய்வூதியர்களும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies