Type Here to Get Search Results !

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தருமபுரியில் சத்துணவு ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்.


தருமபுரி, ஜூலை 31:


காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே. தேவகி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பெ. மகேஸ்வரி, பொருளாளர் பி. வளர்மதி, மாவட்ட நிர்வாகிகள் அனுசுயா, ஜெயா, சங்கீதா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.


மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ. தெய்வானை, மாவட்ட இணை செயலாளர் மீன் முருகன், அகிலன், அமிர்தராஜ், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சி. காவேரி, டாக்டர் ஜியோ நிதி, காப்பாளர் கே. புகழேந்தி ஆகியோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.


போராட்டத்தில், தமிழ்நாடு அரசின் கடைநிலை ஊழியர்களாக பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies