Type Here to Get Search Results !

அரூர் சரக பூப்பந்து போட்டியில் சந்தப்பட்டி அரசு பள்ளி அசத்தல்; மாவட்டப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.


தருமபுரி, ஜூலை 25:


தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையேயான அரூர் சரக அளவிலான பூப்பந்து (ஷட்டில் பேட்மிண்டன்) போட்டியில், சந்தப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.


அரூர் சரக அளவில் நடைபெற்ற இப்போட்டியில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில், சந்தப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். மேலும், மாணவியர் ஜூனியர் பிரிவிலும் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மாணவியர் சீனியர் பிரிவில் இரண்டாம் இடத்தையும் கைப்பற்றினர்.


கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து அரூர் சரக அளவிலான பூப்பந்து போட்டிகளில் சந்தப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்த வெற்றியை முன்னிட்டு பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், தலைமையாசிரியர் தீ. இளங்கோ வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.


மேலும், மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வெற்றிக்குத் தயார்படுத்திய உடற்கல்வி ஆசிரியர் அ. வேடியப்பன் அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்தினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies