பாலக்கோடு, ஜூலை 18:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சவுரிகொட்டாவூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட முயற்சி நடைபெற்றதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுரிகொட்டாவூரைச் சேர்ந்த ராணுவ வீரர் துரைசாமியின் நிலத்திற்கு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழிப்பாதை உள்ளது. துரைசாமி மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக அந்த வழிப்பாதையை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அன்பு என்பவர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அந்த வழிப்பாதையில் கட்டிடம் கட்டும் பணியை தொடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கச் சென்றவர்களிடம் மிரட்டும் வகையில் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும் வருவாய்த் துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் சவுரிகொட்டாவூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
.gif)

.jpg)