Type Here to Get Search Results !

தருமபுரியில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.


தருமபுரி, ஜூலை 25:


தருமபுரி பாரதிபுரம் பகுதியில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.


நிகழ்ச்சியில் உரையாற்றிய சுவாமிகள், "தருமபுரி என்பது தர்மம் தலைத்த ஊர். இங்கு சிறந்த சிற்பக்கலை கொண்ட பல்வேறு பழமையான கோவில்கள் அமைந்துள்ளன. மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே தர்மமும் தோன்றியது. மனித வாழ்வை நல்வழிப்படுத்துவதிலும், ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பதிலும் தர்மம் முக்கிய பங்கு வகிக்கிறது" என்றார்.


மேலும், "மனிதன் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும், திருப்தியுடனும், ஒற்றுமையுடனும் வாழ தர்மம் அவசியம். நல்லொழுக்கம், அன்பு மற்றும் அறநெறி மனித வாழ்க்கையின் அடித்தளமாக இருக்க வேண்டும். காஞ்சி காமாட்சி அம்மன் 32 தர்மங்களை காத்து அறம் வளர்த்த நாயகியாக விளங்குகிறார்" என்று குறிப்பிட்டார்.


"அன்பே சிவம். ஆசை என்பது இயற்கையானது. ஆனால் அது நெறிப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். தர்மமும் பக்தியும் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கப்பட வேண்டும். நல்ல குணங்களும் நல்ல பழக்கவழக்கங்களும் மனிதனை உயர்த்துகின்றன. அனைத்து உயிர்களும் நலமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் அனைவரிடமும் அன்பு செலுத்தி, நற்செயல்களையும் புண்ணிய செயல்களையும் மேற்கொள்ள வேண்டும். மனித மனம் எப்போதும் கருணையுடன் இருக்க வேண்டும்" என்றும் அவர் அறிவுறுத்தினார்.


தருமபுரியில் சங்கட மடம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், அந்த முயற்சி வெற்றிகரமாக நிறைவேற வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் அருளாசி பெற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies