தருமபுரி, ஜூலை 17:
தருமபுரி மாவட்டம் பருத்தி நாத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாப்பாரப்பட்டி மாரியம்மன் திருக்கோவிலில், 27-வது ஆண்டு ஆடி மாத பிறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன. இதையொட்டி அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இருந்து பக்தர்கள் அழகு குத்தி, பூ கரகம், பால்குடம், தீர்த்தகுடம் மற்றும் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து ஸ்ரீ பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த திருவிழாவில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவையொட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
.gif)

.jpg)