தருமபுரி, ஜூலை 17:
இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, தருமபுரி மாவட்ட மை பாரத் கேந்திரா சார்பில் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் சிறப்பு பதிவு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மை பாரத் கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர்களான வெங்கடேஷ், விக்னேஸ்வரி, ரேவதி, மோகன்ராஜ், பாவெல்ராஜ் மற்றும் சமூக ஆர்வலர் ஞானவேல் ஆகியோர் இணைந்து கல்லூரியில் பயிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை மை பாரத் இணையதளத்தில் பதிவு செய்தனர்.
மேலும், மை பாரத் இணையதளத்தில் பதிவு செய்வதன் முக்கியத்துவம், இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு, தன்னார்வப் பணிகள், பயிற்சி மற்றும் அரசின் பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது குறித்து மை பாரத் தருமபுரி அலுவலக பணியாளர் ரா. முனியப்பன் மாணவ, மாணவிகளுக்கு விரிவாக விளக்கினார். இந்நிகழ்ச்சி மூலம் இளைஞர்கள் அரசு சார்ந்த பல்வேறு திட்டங்கள் மற்றும் தன்னார்வ சேவைகளில் இணைந்து சமூகப் பணிகளில் பங்கேற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
.gif)

.jpg)