Type Here to Get Search Results !

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு ஆழிவாயன் கொட்டாய் ஸ்ரீ பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் தரிசனம்.


தருமபுரி, ஜூலை 17:


தருமபுரி மாவட்டம் ஆழிவாயன் கொட்டாய் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாப்பாரப்பட்டி மாரியம்மன் திருக்கோவிலில், 27-வது ஆண்டு ஆடி மாத பிறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பக்தி நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இதையொட்டி அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இருந்து பக்தர்கள் அழகு குத்தி, பூ கரகம், பால்குடம், தீர்த்தகுடம் மற்றும் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து ஸ்ரீ பாப்பாரப்பட்டி மாரியம்மன் திருக்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


ஆடி மாத பிறப்பு விழாவையொட்டி தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவையொட்டி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு, பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies