Type Here to Get Search Results !

தருமபுரியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.


தருமபுரி, ஜூலை 31:


ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தருமபுரி நகரில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன. தருமபுரி குமாரசாமிபேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலும், அரிச்சந்திரன் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவிலும் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.


வழிபாடுகளைத் தொடர்ந்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் தங்க கவச அலங்காரத்திலும், ஸ்ரீ சக்தி மாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆடி வெள்ளியை முன்னிட்டு குமாரசாமிபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவில்களுக்கு வருகை தந்து அம்மனை தரிசித்து வழிபட்டனர். திருவிழாவையொட்டி, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies