பாலக்கோடு, ஜூலை 25:
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சார்பில் அதன் நிறுவனரும் மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் எஸ். ராமதாஸ் அவர்களின் 88-வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நகரச் செயலாளர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினர் வேளாவள்ளி சேகர், மாவட்ட அமைப்புத் தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பாலமுரளி, மாவட்ட பொருளாளர் சரவணகுமாரி, மாநில துணைச் செயலாளர் தமிழ்செல்வி, மாவட்ட தலைவி பெரியம்மாநாகு, மாநில கொள்கை பரப்பணி துணைச் செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது. மேலும், ஒன்றியச் செயலாளர்கள் துரை, மாதையன், முருகேசன், ஏழுகுண்டன், நகரத் தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் சாமிகண்ணு, மாரி, முருகேசன், செல்வம், முத்து, சக்திவேல், நாகராஜ், முருகன், சிவகுரு, கோவிந்தசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மருத்துவர் ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
.gif)

.jpg)