Type Here to Get Search Results !

பாலக்கோடு சுங்கச்சாவடியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல் – டிரைவர் கைது.


பாலக்கோடு, ஜூலை 4:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே புதிய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கார் டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக பாலக்கோடு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாலக்கோடு காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் சுங்கச்சாவடி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது, பெங்களூருவில் இருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான சொகுசு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், காரில் இருந்த 20-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் சுமார் 250 கிலோ எடையுள்ள, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் மறைத்து கடத்தி வரப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, குட்கா பொருட்களையும், சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் (31) என்பவரை கைது செய்து, குட்கா பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, யாருக்கு விநியோகம் செய்யப்பட இருந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies