Type Here to Get Search Results !

தருமபுரியில் இலவச தொழில் முனைவோர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு; ஜூலை 31 கடைசி நாள்.


தருமபுரி, ஜூலை 17:


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI) சார்பில், சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு அரசு சான்றிதழுடன் கூடிய இலவச தொழில் முனைவோர் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பயிற்சி நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை வழிகாட்டுதலின்படி, தமிழக அரசுடன் இணைந்து இந்தியன் வங்கி சார்பில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு பயிற்சிகளை நடத்தி வருகிறது. பயிற்சியுடன் தொழில் தொடங்குதல், வங்கிக் கடன் பெறுதல், சந்தை ஆய்வு, திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட தொழில் முனைவோர் திறன்களும் கற்பிக்கப்படுகின்றன.


மேலும், பயிற்சியின்போது காலை மற்றும் மதிய உணவு, இருவேளை தேநீர் மற்றும் சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படுவதுடன், பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களும் வழங்கப்படும்.


வழங்கப்படும் பயிற்சிகள்:

  • குளிர்சாதனப் பெட்டி மற்றும் ஏ.சி. பழுதுபார்த்தல் – 30 நாட்கள்
  • வீட்டு மின் இணைப்பு பயிற்சி – 30 நாட்கள்
  • கொத்தனார் மற்றும் கான்கிரீட் பணிகள் – 30 நாட்கள்
  • இளநிலை அழகுக்கலை நிபுணர் பயிற்சி – 35 நாட்கள்
  • துரித உணவு தயாரித்தல் மற்றும் துரித உணவகம் அமைத்தல் – 12 நாட்கள்
  • காய்கறி சாகுபடி மற்றும் நாற்றங்கால் மேலாண்மை – 12 நாட்கள்


இந்த பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் தகுதியுடையவர்கள். கிராமப்புறங்களைச் சேர்ந்த மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 31, 2026 ஆகும்.


விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை நகல், மாற்றுச் சான்றிதழ் (TC), 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் தொடர்பு எண்ணுடன் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.


மேலும் விவரங்களுக்கு, இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி அல்லது 04342-230511, 8667679474, 9442274912 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies