Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு.


பாலக்கோடு, ஜூலை 27:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில், நடந்து சென்று கொண்டிருந்த கூலி தொழிலாளி கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தெரிவித்த தகவலின்படி, பெங்களூருவில் இருந்து கோவை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார், பொரத்தூர் அருகே சென்றபோது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த எருதுகூடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சேகர் (33) மீது மோதியதாகக் கூறப்படுகிறது.


இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சேகர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த சேகருக்கு அவரது மனைவி அம்சவள்ளி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து தகவலறிந்த பாலக்கோடு காவல்துறையினர் விரைந்து சென்று, சேகரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த விபத்து தொடர்பாக பாலக்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவத்திற்குப் பிறகு அங்கிருந்து சென்றதாகக் கூறப்படும் கார் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சோகச் சம்பவம் எருதுகூடஹள்ளி கிராம மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies