பாலக்கோடு, ஜூலை 27:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 11-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை சார்பில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவ வீரர் சங்கத் தலைவர் கிருஷ்ணன் பொன்னுசாமி மற்றும் அரிமா சங்க நிர்வாகி தர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் போது, பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, இந்தியாவின் "மக்கள் ஜனாதிபதி" என போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் சேவைகளையும், இளைஞர்களுக்கான அவரது கனவுகளையும் நினைவுகூர்ந்தனர்.
.gif)

.jpg)