தருமபுரி, ஜூலை 28:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கட்டம்பட்டி, பூதனஅள்ளி, நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் அதிமுக நிர்வாகிகளை, புதிதாக பொறுப்பேற்றுள்ள தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் டாக்டர் அசோகன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார்.
அப்போது, "தமிழகத்தில் ஊழலை ஒழிப்பேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது திரைப்பட டிக்கெட்டுகள் ₹200-ல் இருந்து ₹2,000 வரை விற்பனை செய்யப்படுவதை தடுக்க முடியவில்லை. தனது படத்தின் டிக்கெட் முறைகேட்டையே கட்டுப்படுத்த முடியாதவர், மாநிலத்தில் ஊழலை எப்படி ஒழிப்பார்?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுகவின் வலிமை தொண்டர்கள்தான் என்றும், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் கரத்தை வலுப்படுத்தியது போல, கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சிவபிரகாசம், தருமபுரி நகரச் செயலாளர் பூக்கடை ரவி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)