ஒகேனக்கல், ஜூன் 6:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சபையால் 1973-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலக சுற்றுச்சூழல் தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஊட்டமலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலாஜி தலைமையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் வேம்பு, புங்கை, நாவல் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், நடப்பட்ட மரக்கன்றுகளை முறையாக பராமரித்து வளர்க்க உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம், காற்று மாசுபாடு, பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் புவி வெப்பமயமாதலின் தாக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்றனர். இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்தையன், உதவி தலைமை ஆசிரியர்கள் அறிவழகன், இராமசாமி, கருணாமூர்த்தி, சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தணிகைவேல், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)