Type Here to Get Search Results !

கொத்தடிமை தொழிலாளர்கள் விவகாரம்: 12 பேர் பாதுகாப்பாக சொந்த ஊர்களில் உள்ளனர் – தருமபுரி காவல்துறை விளக்கம்.


தருமபுரி, ஜூன் 6:


தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் மற்றும் பெரியப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 12 பேர் தாங்கள் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாகவும், தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக சில தனியார் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியானது.


இச்செய்தி தொடர்பாக தருமபுரி மாவட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை இணைந்து விசாரணை மேற்கொண்டது. விசாரணையில், மேற்கண்ட 12 பேரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருவண்ணாமலை மற்றும் சேலம் மாவட்டங்களில் முன்பணம் பெற்றுக்கொண்டு விவசாயப் பண்ணைகள், மாட்டுப் பண்ணைகள் மற்றும் செங்கல் சூளைகளில் கூலித் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.


அதனைத் தொடர்ந்து அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் பணியாற்றி வந்துள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி பாதுகாப்பாக வசித்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான மேலதிக விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தருமபுரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


இவ்விவகாரம் குறித்து உண்மை நிலையை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies