Type Here to Get Search Results !

உலக சுற்றுச்சூழல் தினம்: ஊட்டமலை தொடக்கப்பள்ளியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி, ஜூன் 5:


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை, மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலைகள் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.


மேலும், கிராம மக்களின் பங்களிப்புடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கிராம மேம்பாடு தொடர்பான பல ஆக்கப்பூர்வமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராமத்தை பசுமையாகவும் தூய்மையாகவும் பராமரிப்பதன் அவசியம் குறித்தும், வீடுகளில் உருவாகும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்கப்பட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊட்டமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கூத்தரசன், அரசு அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies