தருமபுரி, ஜூன் 29:
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சி தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜயின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு கல்வி விருதுகள் வழங்கும் விழா மற்றும் கேக் வெட்டி கொண்டாடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பாப்பாரப்பட்டி நகரச் செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கப்பட்டன.
மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, முதல்வர் விஜயின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு 52 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் ஒன்றியச் செயலாளர் ரஞ்சித், பாலக்கோடு ஒன்றியச் செயலாளர் குமார், கொள்கைப் பரப்பு மாவட்ட அமைப்பாளர் சந்தோஷ், பாப்பாரப்பட்டி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)