Type Here to Get Search Results !

தருமபுரியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் ரத்ததானம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.


தருமபுரி, ஜூன் 28:


மக்கள் விரும்பிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தருமபுரி நகர மேற்கு அமைப்பு சார்பில் மாபெரும் ரத்ததானம் மற்றும் பொது மருத்துவ முகாம் தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை தமிழக வெற்றிக் கழகத்தின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் சிவன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.


இந்த முகாமில் பொதுமக்களுக்கான ரத்ததான முகாம், பொது சுகாதார மருத்துவ பரிசோதனை, கல்வி ஆலோசனை, கண் பரிசோதனை, மாற்றுத்திறனாளிகள் இணைப்பு விழா மற்றும் கழகத்தின் கொள்கைத் தலைவர்கள் குறித்த பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முகாமில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்ததுடன், மருத்துவ சேவைகளையும் பெற்றுக்கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் வீரமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோ, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் தீபன், மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சத்யா, தருமபுரி தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், தருமபுரி நகர மேற்கு செயலாளர் சிட்டி சுரேஷ், இணைச் செயலாளர் கவின், பொருளாளர் பாரூக் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies