பாலக்கோடு, ஜூன் 28:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே அமைந்துள்ள அருள்மிகு பால்வண்ணநாதர் சிவன் திருக்கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேகங்கள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன. சனி பிரதோஷத்தை முன்னிட்டு, மூலவர் பால்வண்ணநாதருக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டது.
சிவபெருமானின் அருளைப் பெற சனி பிரதோஷ நாள் மிகவும் சிறப்பானதாக கருதப்படுவதால், பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து "ஓம் நமசிவாய" என சிவநாமம் ஜபித்தபடி சுவாமியை தரிசனம் செய்தனர். குடும்ப நலன், உடல்நலம், தொழில் முன்னேற்றம் மற்றும் வளமான வாழ்க்கை வேண்டி பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பிரதோஷ வழிபாட்டையொட்டி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதுடன், சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
.gif)

.jpg)