Type Here to Get Search Results !

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சி – தாட்கோ அறிவிப்பு.


தருமபுரி, ஜூன் 8:


தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் தொடர்பான சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்க உள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.


தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது Master Certification in Bridal Makeup Artistry Course மற்றும் Diploma in Creative Hair Dressing & Chemical Treatment Courses ஆகிய பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன.


இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவராகவும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பயிற்சியின் கால அளவு 45 நாட்களாகும். திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள இந்த பயிற்சியில் பங்கேற்கும் தகுதியான பயனாளிகளின் தங்குமிடம் மற்றும் பயிற்சி தொடர்பான செலவுகளை தாட்கோ ஏற்றுக்கொள்ளும். 


பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக சுமார் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வருமானம் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்பயிற்சியில் சேர விரும்புவோர் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான TAHDCO மூலம் பதிவு செய்து கொள்ளலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு திறன் மேம்பாட்டின் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies