பாலக்கோடு, ஜூன் 5:
கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்குச் சென்றனர். பாலக்கோட்டில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், நீண்ட கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பள்ளிக்கு வருகை தந்தனர்.
புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனிடையே, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாலக்கோடு டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் பேருந்து நிலையம் முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வரை கொடி அணிவகுப்பு நடத்தினர்.
பள்ளி திறப்பு நாளையொட்டி மேற்கொள்ளப்பட்ட இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)