Type Here to Get Search Results !

தருமபுரியில் ஸ்ரீ அங்காளம்மன் பாரா மெடிக்கல் நிறுவனத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.


தருமபுரி, ஜூன் 29:


தருமபுரியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அங்காளம்மன் பாரா மெடிக்கல் மருத்துவத் துணை சார்ந்த படிப்புகள் நிறுவனத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடக்க மற்றும் வரவேற்பு விழா உற்சாகமாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சிலம்பரசன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கேக் வெட்டி, முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.


நிகழ்ச்சியில் பேசிய இரண்டாம் ஆண்டு மாணவர்கள், கடந்த ஆண்டு மருத்துவத் துணை சார்ந்த படிப்பின் ஒரு பகுதியாக பல்வேறு மருத்துவமனைகள், மருத்துவ முகாம்கள் மற்றும் அரசு சார்ந்த சுகாதார முகாம்களில் பங்கேற்ற அனுபவம் தங்களுக்கு நடைமுறை அறிவையும், தொழில்முறை திறனையும் மேம்படுத்த உதவியதாக தெரிவித்தனர்.


அதேபோன்று, முதலாம் ஆண்டு மாணவர்களும் பல்வேறு மருத்துவ முகாம்கள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் இரண்டாம் ஆண்டு மாணவி கமலா நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies