Type Here to Get Search Results !

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது.


தருமபுரி, ஜூன் 5:


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக இலக்கியம்பட்டி, தடங்கம் மற்றும் கடகத்தூர் ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் தலைமையில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது பகுதிகளில் நிலவும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தனர்.


குறிப்பாக குடிநீர் வசதி, சாலை வசதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) உள்ளிட்ட தேவைகள் குறித்து பொதுமக்கள் எடுத்துரைத்தனர். இதற்கு பதிலளித்த ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என உறுதியளித்தனர்.


மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை மற்றும் பசுமை கிராமங்களை உருவாக்குதல் தொடர்பான பல்வேறு கருத்துகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. தொடர்ந்து, ஊராட்சி வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies