தருமபுரி, ஜூன் 5:
தருமபுரி நகராட்சியின் அறிஞர் அண்ணா நகர மன்றக் கூட்டரங்கில் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர மன்றத் தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது வார்டுகளில் நிலவும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை முன்வைத்தனர்.
குறிப்பாக குடிநீர் வசதி, கால்வாய் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். மேலும், தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவற்றை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த நகராட்சி ஆணையர் சேகர், உறுப்பினர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மற்றும் அடிப்படை வசதி பணிகள் குறித்து உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் கொண்டு வரப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் மன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் துணை நகர மன்றத் தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி ஆணையர் சேகர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)