Type Here to Get Search Results !

தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிய கல்வியாண்டு தொடக்கம்: மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.


தருமபுரி, ஜூன் 5:


கோடை விடுமுறை முடிவடைந்ததைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து, தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிய கல்வியாண்டு உற்சாகமாக தொடங்கப்பட்டது.


பள்ளி திறந்த முதல் நாளில் மாணவிகள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதா, உதவி தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.


தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா கலந்து கொண்டு மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினார். மேலும், 2026-2027 கல்வியாண்டிற்கான வகுப்புகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். புதிய கல்வியாண்டின் முதல் நாளிலேயே மாணவிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன், கல்வியில் சிறந்து விளங்க ஆசிரியர்கள் ஊக்கமளித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies