தருமபுரி, ஜூன் 5:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆதி பவுண்டேஷன் மற்றும் மாவட்ட சுகாதார அலகு இணைந்து தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட பண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 700 மரக்கன்றுகளை நட்டு குறுங்காடு உருவாக்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.
ஆதி பவுண்டேஷன் நிறுவனர் ஆதிமூலம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பசுமை வளத்தை அதிகரிக்கும் நோக்கில் 700 மரக்கன்றுகள் நடப்பட்டன. புங்கன், பூவரசன், அத்தி, நாவல் உள்ளிட்ட 18 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு குறுங்காடு உருவாக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புவி வெப்பமயமாதலின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அமைப்பினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், சுபா மருத்துவமனை இருதய மருத்துவர் சிவசுப்ரமணியன், சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் கிருஷ்ணன், பண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பிரபாகரன், பவர் கிரிட் டி.எம்.ஜி. பாபு, டி.என்.சி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விவேகானந்தன், மருத்துவர் மனோஜ், கயல் குழுமம் நிறுவனர் அறிவழகன், என்.டி.எஸ்.ஓ. மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)