தருமபுரி, ஜூன் 8:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாரத்திற்குட்பட்ட பூதனஅள்ளி கிராம ஊராட்சியின் குக்கிராமங்களான குப்பன் கொட்டாய், சென்னியம்பட்டி, சத்யா நகர் மற்றும் வெள்ளாளன் கொட்டாய் பகுதிகளில் வசிக்கும் கிராமப்புற தொழிலாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் வேலை வழங்க கோரி மனு அளித்தனர்.
இதற்காக, 27 தனிநபர் விண்ணப்பங்கள் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. கிராமப்புற தொழிலாளர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உறுதி செய்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிகளை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த மனு அளிக்கும் நிகழ்வில், தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெ. பிரதாபன், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் என்.பி. ராஜி, ஈ. அலமேலு மற்றும் வி. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வேலைவாய்ப்பு கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)