Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே விபத்து: குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தை தவிர்க்க முயன்ற கார் தடுப்புச் சுவரில் மோதி சேதம்.


பென்னாகரம், ஜூன் 09:


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதுவதை தவிர்க்க முயன்ற கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. பென்னாகரம் அடுத்துள்ள நாங்க ரோடு பிரிவு பகுதியில், முதுகம்பட்டியிலிருந்து ஒகேனக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றது.


தகவலின்படி, பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் குறுக்கே திடீரென எக்ஸ்எல் இருசக்கர வாகனம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக கார் ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை வலதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் கார் சேதமடைந்தது.


இருப்பினும், காரில் பயணம் செய்தவர்களுக்கோ அல்லது சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகளுக்கோ எந்தவித காயமும் ஏற்படாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பும் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பென்னாகரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies