பென்னாகரம், ஜூன் 3:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மடம் கிராமத்தில், வள்ளல் அதியமான் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் MCC BOYS சார்பில் 8-வது ஆண்டு கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த கிரிக்கெட் போட்டி, இந்த ஆண்டும் மடம் கிராமத்தில் நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தின.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.40,000, மூன்றாம் பரிசாக ரூ.30,000, நான்காம் பரிசாக ரூ.20,000 மற்றும் ஐந்தாம் பரிசாக ரூ.10,000 வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு தருமபுரி மாவட்ட பிரஸ் கிளப் மாவட்ட செயலாளர் எம். கண்ணையன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் மடம் முருகேசன், சிபிஐ ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் எம்.எஸ். மணி, சாமிநாதன், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தண்டபாணி, அஜித், நவீன் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், வள்ளல் அதியமான் இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் போட்டி ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டனர்.
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த போட்டிக்கு பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)