Type Here to Get Search Results !

பள்ளி வாகனங்கள் தகுதிச்சான்று பெற்று மட்டுமே இயக்க வேண்டும்: மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.


தருமபுரி, ஜூன் 3:


தமிழ்நாடு அரசு பள்ளி வாகன சிறப்பு விதிகள் – 2012-ன் படி, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆய்வுக்குழுவின் தகுதிச்சான்று பெற்ற பின்னரே மாணவ, மாணவிகளின் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.


தகுதிச்சான்று புதுப்பித்தல் பணிக்காக தற்போது பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ள பள்ளி வாகனங்களின் பராமரிப்பு மற்றும் ஆய்வு பணிகளை பள்ளிகள் திறக்கும் நாளுக்கு முன்பாகவே நிறைவு செய்து, மாவட்ட ஆய்வுக்குழுவின் சான்றிதழைப் பெற்று இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


மேலும், தகுதிச்சான்று பெறாத பள்ளி வாகனங்களை மாணவ, மாணவிகளின் போக்குவரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்றும், இந்த உத்தரவை மீறி பொது சாலைகளில் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies