தருமபுரி, ஜூன் 3:
பள்ளிகள் நாளை (04.06.2026) திறக்கப்படுவதை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பள்ளிக் கல்வித்துறை, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: தருமபுரி மாவட்டப் பள்ளிக் கல்வித்துறைக்கும், மதிப்புமிகு ஆசிரியர்கள், அன்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
04.06.2026 வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி வளாகத் தூய்மை, வகுப்பறைத் தூய்மை, மாணவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் வசதி, சுகாதாரமான கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை முன்னேற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், பருவமழை காலத்தை முன்னிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மாணவர்கள் பாதுகாப்பான மற்றும் சீரான கற்றல் சூழலில் கல்வி கற்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்த புதிய கல்வியாண்டின் தொடக்கம் மாணவர்களுக்கு புதிய நம்பிக்கை, உயர்ந்த இலக்குகள் மற்றும் சிறந்த சாதனைகளை வழங்கும் வகையில் அமைய வேண்டும். தருமபுரி மாவட்டம் கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக விளங்கிட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)