Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் கருணாநிதி 103-வது பிறந்த நாள் விழா: அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.


தருமபுரி, ஜூன் 3:


தருமபுரி மேற்கு மாவட்டம், பாலக்கோடு பேரூர் கழகம் சார்பில் முன்னாள் முதலமைச்சரும் முத்தமிழறிஞருமான கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் விழா பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு சிறப்பாக கொண்டாடப்பட்டது.


நிகழ்ச்சிக்கு பேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி தலைவருமான பி.கே. முரளி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முருகன், நகர அவைத் தலைவர் அமானுல்லா, ஒன்றிய துணைச் செயலாளர் ரவி, நெசவாளர் அணி மாவட்ட செயலாளர் பட்டு அஜிசுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


விழாவில் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர்கள் குமரன், மோகன், ஒன்றிய பிரதிநிதிகள் பெரியசாமி, இலியாஷ், கிளைச் செயலாளர்கள் ராஜி, கணேசன், சரவணன், மோகன், ஜபி, வடிவேல், சபீர், பேரூராட்சி கவுன்சிலர்கள் பத்தேகான், ரூஹித், சரவணன், வகாப்ஜான், சாதிக், மோகன், பிரியாகுமார், ஜெயந்திமோகன், நகர இளைஞரணி அமைப்பாளர்கள் மன்சூர், சமர்ஜான், நகர துணைச் செயலாளர்கள் மாதேஷ், பாபு, நிர்வாகிகள் நவ்சாத், தொண்டரணி குமரன், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் தமிரசன், ஸ்ரீதர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி உற்சாகமான சூழலில் நடைபெற்றதுடன், அவரது அரசியல் மற்றும் சமூகப் பணிகள் நினைவுகூரப்பட்டன.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies