Type Here to Get Search Results !

பாலக்கோடு அடுத்த காட்டம்பட்டி கிராமத்தில் கருணாநிதி 103வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.


தருமபுரி, ஜூன் 3:


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் திமுக ஒன்றியக் கழகம் சார்பில் முன்னாள் முதலமைச்சரும் முத்தமிழறிஞருமான கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தப்பன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். விழாவில் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் தங்கவேல், முருகன், சரவணன், செல்வம், வரதராஜ், கன்னியப்பன், செந்தில், நாகலிங்கம், குள்ளம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதியின் அரசியல் மற்றும் சமூகப் பணிகளை நினைவுகூர்ந்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies