Type Here to Get Search Results !

கருணாநிதி 103-வது பிறந்தநாள் விழா: தருமபுரியில் திமுகவினர் கொண்டாட்டம்.


தருமபுரி, ஜூன் 3:


முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, தருமபுரி நகர திமுக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தருமபுரி நான்கு ரோடு பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆ. மணி எம்.பி. தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய திமுகவினர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.


இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மசெல்வன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி, நகர்மன்றத் தலைவர் லட்சுமி நாட்டான் மாது, கழக பேச்சாளர் டி.ஏ. ரவி, நகர துணைச் செயலாளர் வ. முல்லவேந்தன், நகரச் செயலாளர்கள் நாட்டான் மாது, கௌதம், கனகராஜ், பொன். மகேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


கருணாநிதியின் அரசியல், சமூக மற்றும் தமிழ் வளர்ச்சிப் பணிகளை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் அவரது புகழை போற்றினர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies