பாலக்கோடு, ஜூன் 09:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி.) பணியாற்றி வந்த ராஜசுந்தர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிய காவல் துணை கண்காணிப்பாளராக மருத்துவர் டி. மாலதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த மருத்துவர் டி. மாலதியை பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக தமிழக அரசு நியமித்துள்ளது. இதையடுத்து அவர் பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்ற மருத்துவர் டி. மாலதிக்கு காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். பாலக்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தவும், பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்க்கவும் முன்னுரிமை அளித்து செயல்படுவதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)