Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் ஜமாபந்தி 2026: ஜூன் 16 முதல் 19 வரை நடைபெறுகிறது – விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு.


தருமபுரி, ஜூன் 11:


தருமபுரி மாவட்டத்தில் 1435-ஆம் (2025-2026) பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வரும் 16.06.2026 முதல் 19.06.2026 வரை அனைத்து வட்டங்களிலும் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அறிவித்துள்ளார். ஜமாபந்தி நிகழ்வின்போது பொதுமக்களிடமிருந்து நிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.


நல்லம்பள்ளி வட்டம்

நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில்:

  • 16.06.2026 – நல்லம்பள்ளி உள்வட்டம்
  • 17.06.2026 – பாளையம் உள்வட்டம்
  • 18.06.2026 – இண்டூர் உள்வட்டம்


பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில்:

  • 16.06.2026 – பாப்பிரெட்டிப்பட்டி
  • 17.06.2026 – பொம்மிடி
  • 18.06.2026 – கடத்தூர்
  • 19.06.2026 – தென்கரைகோட்டை


தருமபுரி வட்டம்

தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில்:

  • 16.06.2026 – தருமபுரி
  • 17.06.2026 – கிருஷ்ணாபுரம்


அரூர் வட்டம்

அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில்:

  • 16.06.2026 – அரூர்
  • 17.06.2026 – மொரப்பூர்
  • 18 & 19.06.2026 – தீர்த்தமலை


பென்னாகரம் வட்டம்

பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) தலைமையில்:

  • 16.06.2026 – பென்னாகரம்
  • 17.06.2026 – பெரும்பாலை
  • 18.06.2026 – சுஞ்சல்நத்தம்
  • 19.06.2026 – பாப்பாரப்பட்டி


காரிமங்கலம் வட்டம்

காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி ஆணையர் (ஆயம்) தலைமையில்:

  • 16.06.2026 – காரிமங்கலம்
  • 17.06.2026 – கம்பைநல்லூர்
  • 18.06.2026 – பெரியானஅள்ளி


பாலக்கோடு வட்டம்

பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில்:

  • 16.06.2026 – புலிக்கரை
  • 17.06.2026 – பாலக்கோடு
  • 18.06.2026 – மாரண்டஅள்ளி
  • 19.06.2026 – வெள்ளிச்சந்தை


எந்த மனுக்களை அளிக்கலாம்?

ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் கீழ்க்கண்ட மனுக்களை நேரடியாக அளிக்கலாம்:

  • நிலம் தொடர்பான மனுக்கள்
  • பட்டா மாறுதல் மேல்முறையீடு
  • பட்டாவில் பெயர் திருத்தம்
  • பட்டாதாரர் பெயரில் எழுத்துப் பிழை திருத்தம்
  • பரப்பளவு திருத்தம்
  • நிலவுடமை மேம்பாட்டுத் திட்ட மேல்முறையீடு
  • உட்பிரிவு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள்
  • வருவாய்த்துறை சார்ந்த பிற கோரிக்கைகள்


Farmer ID சிறப்பு முகாம்

ஜமாபந்தி நிகழ்வின்போது Farmer Registry சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதுவரை விவசாய அடையாள அட்டை பெறாத விவசாயிகளுக்கு "விவசாய அடையாள எண்" (Farmer ID) உருவாக்கி வழங்கப்படும். எதிர்காலத்தில் அரசின் அனைத்து விவசாயத் திட்டங்களின் பயன்களும் Farmer ID அடிப்படையில் வழங்கப்பட உள்ளதால், விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது நிலம் மற்றும் வருவாய்த்துறை தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வு காண, இந்த ஜமாபந்தி முகாம்களில் நேரடியாக பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies