Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் 6 தீயணைப்பு நிலையங்களில் இலவச தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி; பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு.


ஒகேனக்கல், ஜூன். 04:
தருமபுரி மாவட்டத்தில் தீ விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் பொதுமக்களுக்கான இலவச தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் அடிப்படை தீ தடுப்பு பாதுகாப்பு முறைகள், தீ விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை பாதுகாப்பாக அணைக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட உள்ளது.


மேலும், பல்வேறு வகையான தீயணைப்பு கருவிகள், அவற்றின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை முறையாக பயன்படுத்தும் நடைமுறைகள் குறித்தும் செய்முறை விளக்கங்களுடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 6 தீயணைப்பு நிலையங்களிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட உள்ளன. பொதுமக்கள் தங்களது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்தில் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம்.


பயிற்சி வகுப்புகள் ஜூன் 6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாட்களிலும் காலை 11 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். எனவே, தீ விபத்துகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு அறிவை பெற விரும்பும் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி இலவச பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies