பென்னாகரம்:
தருமபுரி மாவட்டத்தின் புதிய பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜ்குமார் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பென்னாகரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் உற்சாகமாக கொண்டாடினர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜ்குமார், தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை வரவேற்று பென்னாகரம் மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் ரஞ்சித் மற்றும் பென்னாகரம் ஒன்றிய செயலாளர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு பட்டாசுகள் வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ராஜ்குமார் தலைமையில் தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் மேலும் வேகமடையும் என்ற நம்பிக்கையை கட்சியினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கிழக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர், பள்ளித் தாளாளர் முருகன், நகர செயலாளர் அரவிந்த், மாவட்ட கொள்கை பரப்பு அமைப்பாளர் சந்தோஷ் உள்ளிட்ட தமிழக வெற்றி கழகத்தின் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)