தருமபுரி, ஜூன் 30:
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது சார்ந்தோர்களுக்கான சுயவேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கு மற்றும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 09.07.2026 (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் அன்று பிற்பகல் 4.00 மணிக்கு, தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சுயவேலைவாய்ப்பு தொடர்பான அரசுத் திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது சார்ந்தோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து நேரடியாக மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டமும் நடைபெறவுள்ளது.
எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது சார்ந்தோர்களும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், கூட்டத்தில் அளிக்க விரும்பும் கோரிக்கை மனுக்களை இரண்டு பிரதிகளில் தயாரித்து கொண்டு வருமாறும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
.gif)

.jpg)