Type Here to Get Search Results !

ஆதரவற்ற காப்பக மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.


தருமபுரி, ஜூன் 7:


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியைச் சேர்ந்த பிரைம் க்ரோ சிட் நிறுவனம் மற்றும் உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பில், ஆதரவற்ற காப்பக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அதியமான்கோட்டையில் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 70 ஆதரவற்ற காப்பக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், பள்ளிப் பைகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சிக்கு உதவும் உறவுகள் அறக்கட்டளையின் நிறுவனர் ராமன் முன்னிலை வகித்தார். பிரைம் க்ரோ சிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முத்துகுமாரசாமி தலைமை தாங்கி, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு சமூக அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆச்சி மசாலா நிறுவன மேலாளர் சிவா, சேலம் மாவட்ட சட்ட நீதி இயக்க துணைத் தலைவர் மணிமொழி, தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன உறுப்பினர்கள், காப்பக பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பிரைம் க்ரோ சிட் மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies