Type Here to Get Search Results !

உலக பட்டினி தினம்: பென்னாகரத்தில் 1,500 பேருக்கு உணவு வழங்கிய எம்.எல்.ஏ கஜேந்திரன்.


பென்னாகரம், மே 28:


உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, பென்னாகரம் பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன் சுமார் 1,500 ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கினார்.


ஒவ்வொரு ஆண்டும் மே 28-ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகளவில் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பட்டினி இல்லாத உலகத்தை உருவாக்கவும், நிலையான உணவுப் பாதுகாப்பு தீர்வுகளை வலியுறுத்தவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.


இதனை முன்னிட்டு, பசிப்பிணியை போக்கும் நோக்கத்துடன் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ். கஜேந்திரன், அங்கிருந்த ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினார்.


நிகழ்ச்சியில் த.வெ.க மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவா, கட்சி நிர்வாகிகள் சிலம்பரசன், லோகநாதன், வேலு, விஜய், ராபின், மகளிர் அணி பாரதி, சந்தோஷ், புவனேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர். ஏழை மக்களின் பசியை போக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுத்த இந்த மனிதநேய நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies