தருமபுரி, மே 28:
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தருமபுரியில் உள்ள வெங்கடேஸ்வரா மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளி மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் காலை உணவு வழங்கினர். உலக பட்டினி தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள், ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் சி. ஜோசப் விஜய் கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா. சிவன் தலைமையில், தருமபுரி தெற்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில், ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் ஏற்பாட்டில் பிடமனேரியில் உள்ள வெங்கடேஸ்வரா மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளியில் சிறப்பு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டதுடன், அவர்களுடன் கலந்துரையாடியும் தொண்டர்கள் உற்சாகப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வித்யா, ஒன்றிய நிர்வாகிகள் நாகராஜ், இலக்கியம்பட்டி வெங்கடேஷ், அருள் பூவரசன், பரமசிவம், குனா, சுந்தரவேல், பிரகாசம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)