பாப்பாரப்பட்டி, மே. 28:
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பாப்பாரப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உலக பட்டினி தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள், ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் சி. ஜோசப் விஜய் கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா. சிவன் தலைமையில், பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயலாளர் ஆர். ரமேஷ் ஏற்பாட்டில் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் ஆதரவற்றோர் உள்ளிட்ட சுமார் 500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அன்னதான சேவையில் ஈடுபட்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)