Type Here to Get Search Results !

உலக பட்டினி தினம்: பாலக்கோட்டில் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கிய த.வெ.க நிர்வாகிகள்.


பாலக்கோடு, மே.28:


உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் குமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், நகர செயலாளர் விக்னேஷ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சஞ்சீவன், இணை செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஒவ்வொரு ஆண்டும் மே 28-ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பட்டினி இல்லாத உலகத்தை உருவாக்கவும், நிலையான உணவுப் பாதுகாப்பு தீர்வுகளை வலியுறுத்தவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, பசிப்பிணியை போக்கும் நோக்கத்துடன் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சிறப்பு அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பாலக்கோடு டி.எஸ்.பி. ராஜசுந்தர், முன்னாள் எம்.எல்.ஏ. மாதப்பன், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினர்.


இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள், சார்பு அணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், ஜோதி, இந்திரா, ஈஸ்வரி, போக்குவரத்து அணி தலைவர் சிவசண்முகம், செயலாளர் பிரபு, பூத் கமிட்டி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies