தருமபுரி, மே.28:
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மை தருமபுரி அமைப்பின் சார்பில் தருமபுரி அரசு மருத்துவமனை அருகே சுமார் 3,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மை தருமபுரி அமைப்பின் மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 முதல் “பசிக்குதா வாங்க சாப்பிடுங்க” என்ற பெயரில் பசித்தோர், முதியோர் மற்றும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்களுக்கு தினசரி அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பல நல்ல உள்ளங்களின் ஆதரவுடன் இந்த சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உலக பட்டினி தினமான மே 28-ஐ முன்னிட்டு, மை தருமபுரி அமைப்பு சார்பில் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தருமபுரி அரசு மருத்துவமனை அருகே நடைபெற்ற இந்த நிகழ்வில் காலை முதல் மாலை வரை ஆயிரக்கணக்கானோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் சிவன், மருத்துவ அணி செயலாளர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபக், இணை செயலாளர் வீரமணி, பொருளாளர் கோபி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அன்னதான சேவையில் ஈடுபட்டனர்.
மேலும், எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், பி.எஸ்.பி. சுரேஷ், இந்தியன் பில்லர்ஸ் வினோத், அரவிந்த் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் பங்கேற்றனர். மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா தலைமையில், அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன், சண்முகம், கணேஷ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)